ஆக.19-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.14,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) மாடலின் வெளியீட்டு தேதியானது அமேசான் (Amazon) தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மி 15 5ஜி போனின் உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் மற்றும் குளோபல் மார்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த ரெட்மி போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. அதில் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மூலம் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இது வெளியாக இருப்பது தெரிகிறது.

ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): இந்த ரெட்மி போனில் 7000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக இருக்கும் என்று ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலிகான்-கார்பன் டெக்னாலஜி (Silicon Carbon Technology) கொண்டிருக்கிறது.
4+ வருடங்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டர் ஹெல்த் கொடுக்கப்படுகிறது. ராயல் குரோம் டிசைனில் (Royal Crome Design) ஏரோஸ்பேஸ்-கிரேடு மெட்டல் ஐலேண்ட் (Aerospace-grade Metal Island) கிடைக்கிறது. இந்த டிசைனுடன் மிட்நைட் பிளாக் (Midnight Black), ப்ரோஸ்டட் ஒயிட் (Frosted White) மற்றும் சாண்டி பர்பிள் (Sandy Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த ரெட்மி 15 5ஜி போனில் 6.9 இன்ச் ஐ சேப் டிஸ்பிளே (Eye Safe Display) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவிஸ் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேட்டரி பேக்கப் மட்டுமல்லாமல், டிஸ்பிளே அவுட்புட்டும் பக்காவாக எதிர்பார்க்கலாம். சியோமி ஹைப்பர்ஓஎஸ் 12 (Xiaomi HyperOS 2) மற்றும் ஜெமினி, சர்க்கிள் டூ சர்ச் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 6s Gen 3 SoC) கிடைக்கிறது. இந்த ரெட்மி 15 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விலை விவரங்கள் மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ரெட்மி 15 5ஜி போனானது, மலேசிய மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், அங்கு இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை தெரிந்துவிட்டது. இதே பட்ஜெட் செக்மெண்ட்டில் இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதற்கு முந்தைய மாடல்கள் அப்படித்தான் வந்துள்ளன.
மலேசிய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,211ஆக இருக்கிறது. இது மலேசிய ரிங்கிட் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாகும். ஆகவே, மாற்றங்கள் இருக்கலாம். இருப்பினும், பட்ஜெட் செக்மெண்ட்டில் பெரிதும் மாற்றம் இருக்காது. அதேபோல இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








