தீபாவளிக்கு வாங்குனா இதை வாங்கனும்.. ரூ.13,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரெட்மி 15 5ஜி (REDMI 15 5G) அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, 12 ஜிபி ரேம் மற்றும் IP64 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த ரெட்மி 15 5ஜி போனின் விவரங்கள் இதோ.
6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), ப்ரோஸ்ட் ஒயிட் (Frosted White) மற்றும் சான்டி பர்பிள் (Sandy Purple) கலர்களில் கிடைக்கிறது.

இதில் 6 ஜிபி ரேம் கொண்ட ப்ரோஸ்ட் ஒயிட் வேரியண்ட் பிளிப்கார்ட் தள்ளுபடி போக ரூ.14,110 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,160 விலைக்கு வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும், ரூ.750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (REDMI 15 5G Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில்ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.9 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144H ரெஃப்ரெஷ் ரேட், 288Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 374 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
6என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாபாடிராகன் 6எஸ் ஜென் 3 (6nm Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.
இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 33W சார்ஜர் கொடுக்கப்படுகிறது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. அதேபோல இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்படுகிறது. 8.4 எம்எம் தடிமன் கிடைக்கிறது.
இந்த ரெட்மியில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. டைப்-சி ஆடியோ மற்றும் டால்பி சர்டிபிகேஷன் கொண்ட பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speaker) கிடைக்கிறது. ஏரோஸ்பேஸ் கிரேடு மெட்டல் கேமரா டேகோ கிடைக்கிறது. அதேபோல ஜெமினி, சர்கிள் டூ சர்ச் போன்ற ஏஐ பீச்சர்களையும் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








