ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.14,999 போதும்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரெட்மி 15 5ஜி (REDMI 15 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான விலை மட்டுமல்லாமல், பெரிய 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6என்எம் ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த ரெட்மி 15 5ஜி மாடலின் விலை மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஒப்பிடுகையில் ரெட்மி மாடல்களுக்கு வரவேற்பு பெரிதாக இல்லை என்பது தெரிகிறது. இதனால், அடிமட்ட விலையிலான ஸ்மார்ட்போன்களை களமிறக்க அந்த நிறுவனம் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில், ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனை அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் களமிறக்கியது.

இந்த ரெட்மியின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையோடு அமேசான் தளத்தில் விற்பனை தொடங்கி இருக்கிறது.
பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கின்றன. இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), ப்ரோஸ்ட் பிளாக் (Frosted Black) மற்றும் சான்டி பர்பிள் (Sandy Purple) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பேட்டரி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா போன்ற பீச்சர்களும் பக்காவாக இருக்கின்றன.
ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (REDMI 15 5G Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாபாடிராகன் 6எஸ் ஜென் 3 (Octa Core 6nm Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.9 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 144H ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 288Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இதுபோக 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அக்சிலரி லென்ஸ் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஃபிலிம்கேமரா (filmCamera), எச்டிஆர் மோட் (HDR Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சார்ஜிங் செய்து கொள்ளலாம். இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) சென்சார் மட்டுமே கிடைத்தாலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் மற்றும் டைப்-சி ஆடியோ கொடுக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே மற்றும் சிப்செட் பீச்சர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








