Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல புது Redmi போன்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, வெளியீட்டு தேதி, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎஸ் அப்டேட், கேமரா மற்றும் கலர் போன்ற பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. ஆகவே, இதுவரையில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். அதோடு எதிர்பார்க்கப்படும் விலையையும் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 19ஆம் தேதியில் ரெட்மி 15 5ஜி போன் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், அதில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதுபோக முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இப்போது, விலை விவரங்களும் கிட்டத்தட்ட தெரிந்துவிட்டன. அதாவது, இந்த ரெட்மி 15 5ஜி போனானது மலேசிய மார்கெட்டில் வெளியாகிவிட்டது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல புது Redmi போன்.. 7000mAh பேட்டரி.. மாடல்?

ஆனால், கலர் வேரியண்ட்களில் மாறுபாடு இருக்கிறது. அதாவது, மலேசிய மார்கெட்டில் ரிப்பிள் கிரீன் (Ripple Green), டைட்டன் கிரே (Titan Gray) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் வெளியாகியது. ஆனால், இந்தியாவில் மிட்நைட் பிளாக் தவிர மற்ற கலர்கள் மாறி இருக்கிறது. இங்கு ப்ரோஸ்டெட் ஒயிட் (Frosted White) மற்றும் சாண்டி பர்பிள் (Sandy Purple) வருகிறது.

மற்ற பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதேபோல மலேசியாவில் இந்த ரெட்மி 15 5ஜி போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்லேயே இங்கும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த விலையை பார்ப்பதற்கு முன்பாக, இந்திய வேரியண்ட்டின் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இவை ரெட்மி இந்திய தளத்தில் உறுதி செய்யப்பட்டவை.

ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கிடைக்கிறது. இதற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல புது Redmi போன்.. 7000mAh பேட்டரி.. மாடல்?

6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz அடாப்டிவ்சின்க் (AdaptiveSync) ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. முக்கிய பீச்சராக 7000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 18W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ ஸ்கை (AI Sky) மற்றும் கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள் (Classic Film Filters) கிடைக்கின்றன. இதுபோக IP64 ரேட்டிங் கொடுக்கும் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இதுவொரு பட்ஜெட் மாடலாக இருப்பதால், சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கிடைக்கிறது. டால்பி ஆடியோ உள்ளது.

இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மலேசிய மார்கெட்டில் இந்த ரெட்மி 15 5ஜி போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் வைத்து பார்க்கும்போது, இந்த பட்ஜெட் மட்டுமே சரியாக இருக்கும். ஆகஸ்ட் 19ஆம் தேதியில் தெரிந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15 5G With 50MP Camera 7000mAh Battery To Launch on August 19 Check Confirmed Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X