Home
Mobile

நாளைக்கு புது 5G போன் லாஞ்ச்.. இந்த 7000mAh போனுக்கு மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி கொடுக்கும் மாடலாக ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) ஸ்மார்ட்போன் நாளை வெளியாக இருக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், சிப்செட், கேமரா போன்ற பீச்சர்கள் வெளியாகி பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் செய்ய வைத்துள்ளது. இப்போது, ரெட்மி 15 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

5500mAh பேட்டரி, 6000mAh பேட்டரி மற்றும் 6500mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களே இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டன. 7000mAh பேட்டரி, 7300mAh பேட்டரி மாடல்கள் இப்போது மார்கெட்டில் அதிகம் வெளியாகி வருகின்றன. இதில் ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் இந்த ரெட்மி 15 5ஜி போனானாது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாளைக்கு புது 5G போன் லாஞ்ச்.. இந்த 7000mAh போனுக்கு மார்கெட் வெயிட்!

நாளை இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, அமேசான் விற்பனையில் வாங்க கிடைக்கும் என்பதையும் ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா, டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகி இருந்தும், விலை விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், மலேசியாவில் இந்த ரெட்மி 15 5ஜி போன் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

அந்த மார்கெட்டில் இதன் ஆரம்ப விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்த விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் சற்று கூடுதல் விலைக்கு வெளியானாலும், அதுவும் பட்ஜெட் விலையில் மட்டுமே இருக்கும் என்பதால், ரெட்மி பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): இந்த ரெட்மியில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.9 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. இது எல்சிடி டிஸ்பிளேவா அல்லது அமோலெட் டிஸ்பிளேவா என்பது வெளியீட்டுக்கு பிறகே தெரியவரும். சியோமி ஹைப்பர்ஓஎஸ் 12 (Xiaomi HyperOS 2) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

நாளைக்கு புது 5G போன் லாஞ்ச்.. இந்த 7000mAh போனுக்கு மார்கெட் வெயிட்!

பட்ஜெட் மாடலாக இருந்தும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Octa Core Snapdragon 6s Gen 3 SoC) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு ஓஎஸ் அப்டேட்கள் (OS Updates) மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கிறது. இந்த ரெட்மி 15 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்கும். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தாஸ் 23.5 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும். 12.75 மணி நேரங்களுக்கு பிஜிஎம்ஐ பேக்கப் கொடுக்கும். 50 எம்பி டூயல் ரியர் ரேமரா கேமரா கிடைக்கிறது. டால்பி ஆடியோ மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரெட்மி 15 5ஜி போனில் ப்ரோஸ்டட் ஒயிட் (Frosted White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சாண்டி பர்பிள் (Sandy Purple) ஆகிய 3 கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த பீச்சர்கள் எல்லாமே ரெட்மி நிறுவனம் உறுதி செய்தவையாகும். பேட்டரி கேபாசிட்டி அதிகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த ரெட்மி 15 5ஜி பட்டையை கிளப்ப வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15 5G To Launch in India Tomorrow With 7000mAh Battery Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X