கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வரும் 7000mAh பேட்டரி கொண்ட Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது அமேசான் தளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் ரெட்மி 14 5ஜி மற்றும் ரெட்மி 14சி 5ஜி விட பெரிய பேட்டரியுடன் வரும் என்று மைக்ரோசைட் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி உடன் வெளிவர உள்ளது.
அதேபோல் அமேசான் டீசரில் 1% பேட்டரியில் கூட, இந்த போன் 7.5 மணிநேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் தான் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G specifications): ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.9-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 12ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதுவும் ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பலவேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 7000mAh பேட்டரி உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.15,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








