Home
Mobile

கிடுகிடுவென உயர்ந்த ரெட்மி 15 5ஜி போனின் விலை.. விலைய கேட்டா ஆடி போயிடுவீங்க!

இந்தியாவில் ரெட்மி 15 5ஜி போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மெமரி மற்றும் சிப்செட் விலைகளைத் தொடர்ந்து இந்த ரெட்மி போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 15 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.18,499-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.20,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடுவென உயர்ந்த ரெட்மி 15 5ஜி போனின் விலை..

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 15 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.20,499-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.22,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 15 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.22,499-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.24,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். ஹைப்பர்ஓஎஸ் 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 1080 × 2340 பிக்சல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆனது லோ ப்ளூ லைட், ஃப்ளிக்கர் ஃபிரீ மற்றும் சர்க்காடியன்-பிரெண்டலி தரநிலைகளுக்கான TÜVரைன்லேண்ட் சான்றிதழ்கள் பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் கூகுள் ஜெமினை மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், ஐஆர் பிளாஸ்டர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி போனில் உள்ளன.

கிடுகிடுவென உயர்ந்த ரெட்மி 15 5ஜி போனின் விலை..

ரெட்மி 15 5ஜி 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

மேலும் 7000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Redmi 15 5G price hiked silently in India: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X