சத்தமில்லாமல் அறிமுகமானது புது Redmi 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 7000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சர்க்கிள் டு சர்ச் (Circle to Search), AI ஏரேசர் (AI Eraser), ஏஐ ஸ்கை (AI Sky) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 15 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ரிப்பிள் கிரீன் (Ripple Green), டைட்டன் கிரே (Titan Gray) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஆனால் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி போனின் விலை MYR 729 (இந்திய மதிப்பில் ரூ.15,000). அதேபோல் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தியாவில் புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








