மிரண்டு போன மார்க்கெட்.. 7000mAh பேட்டரி.. 108MP கேமரா..வருகிறது ரெட்மி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 15 5ஜி மற்றும் ரெட்மி 15 4ஜி (Redmi 15 4G) ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியான நிலையில் தற்போது ரெட்மி 15 4ஜி போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த 4ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி 15 4ஜி அம்சங்கள் (Redmi 15 4G specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்ஸ் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 12ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
குறிப்பாக ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் 108ம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பலவேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
உடன் ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி போனில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி 15 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போன் அனைத்து நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit : XpertPick


Click it and Unblock the Notifications








