Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. 5160mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. அறிமுகமானது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 14ஆர் 5ஜி (Redmi 14R 5G) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ரெட்மி 14ஆர் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி 14ஆர் 5ஜி அம்சங்கள் (Redmi 14R 5G Specifications): 6.88-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1640 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஆர்டர் அள்ளுமே.. அறிமுகமானது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ர்லிநசழுளு சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (side-mounted fingerprint sensor) உடன் இந்த புத்தம் புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ரெட்மி 14ஆர் 5ஜி போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி 14ஆர் 5ஜி போன்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரெட்மி 14ஆர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5160mAh பேட்டரி உடன் இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். அதேபோல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆர்டர் அள்ளுமே.. அறிமுகமானது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆலிவ் கிரீன் (Olive Green), ஷேடோ பிளாக் (Shadow Black), லாவெண்டர் (Lavender) மற்றும் டீப் சீ ப்ளூ (Deep Sea Blue)நிறங்களில் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,099(இந்திய மதிப்பில் ரூ.13,000)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 14R 5G Launched in China: check specifications price, colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X