Home
Mobile

போன வருஷம் சக்கைப்போடு போட்ட Redmi போனின் அடுத்த வெர்ஷன் அறிமுகம்.. அதுவும் ரூ.11,000 க்கு.. என்ன மாடல்?

Redmi 14C Price and Specifications: கடந்த 2023 டிசம்பரில், பட்ஜெட்-விலை பிரிவில் அறிமுகமாகி.. விற்பனையில் சக்கைப்போடு போட்ட ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக ரெட்மி 14சி (Redmi 14C) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே, 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5160எம்ஏஎச் பேட்டரி உட்பட "விலையை மீறிய" பல அம்சங்களை கொண்டுள்ள ரெட்மி 14சி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

ரெட்மி 14சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Redmi 13C Specifications): இது டூயல் சிம் (நானோ + நானோ) சப்போர்ட் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பளிங் ரேட் மற்றும் 450நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

போன வருஷம் சக்கைப்போடு போட்ட Redmi போனின் அடுத்த வெர்ஷன் அறிமுகம்!

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி81 சிப்செட் (MediaTek Helio G81) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி வரையிலான eMMC 5.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மேலும் விரிவாக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 14சி ஸ்மார்ட்போனில் எப்/1.8 அபெக்ஷர் உடனான 50 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரண்டாவது கேமரா - பெயர் குறிப்பிடப்படாத லென்ஸ் ஆக உள்ளது. முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் ஆனது 5160எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த இடத்துலே, ஸ்மார்ட்போனுடன் பவர் அடாப்டர் அனுப்பப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 4ஜி LTE, ப்ளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. போர்ட்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, இது ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆக்சலரோமீட்டர், விர்ச்சுவல் ப்ராக்சிமிட்டி சென்சார் மற்றும் இ-காம்பஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டு உள்ளது. கடைசியாக, அளவீடுகளில் இது 171.88 x 77.8.8.22 மிமீ உள்ளது மற்றும் எடையில் (கலர் ஆப்ஷன்களை பொறுத்து) 207 கிராம் முதல் 211 கிராம் வரை மாறுபடுகிறது.

ரெட்மி 14சி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Redmi 14C Price): ரெட்மி நிறுவனமானது ரெட்மி 14சி ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, செக்கியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.11,100 க்கு வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,700 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ட்ரீமி பர்பில், மிட்நைட் பிளாக், சேஜ் கிரீன் மற்றும் ஸ்டாரி ப்ளூ என மொத்தம் 4 கலர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ரெட்மி 13சி ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைப்பதால், அதன் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ரெட்மி 14சி மாடல், கண்டிப்பாக இந்தியாவில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அறிமுகமானதும் அதுகுறித்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C with 5160mAh Battery 6 88 inch LCD 120Hz Display Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X