உலகமே வெயிட்டிங்.. ரூ.8000 விலையில் வரப்போகும் Redmi போன்.. எப்போ அறிமுகம் தெரியுமா?
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்டு மிக விரைவில் அதிகம் எதிர்பார்க்கப்படட அதன் புதிய ரெட்மி 14C (Redmi 14C) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டதாக தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புதிய ரெட்மி 14C (Redmi 14C) ஸ்மார்ட்போன் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. அதற்கு காரணம், நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த ரெட்மி 13C மொபைல் தான். இது வெறும் ரூ.8000 விலையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஆர்வத்தை தூண்டிய புதிய ரெட்மி 14C (Redmi 14C) ஸ்மார்ட்போன் சாதனம் ஆனது IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டது. சியோமி (Xiaomi) இந்த மாடலை விரைவில் எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. முன்னர் 2409BRN2CL எனக் காணப்பட்ட இந்த சாதனம் இப்போது அதிகாரப்பூர்வமாக Redmi 14C என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடங்குவதற்கான ஒரு பெரிய படியாகும். இந்த தகவலை XiaomiTime குழு கண்டறிந்துள்ளது.

ரெட்மி 14C (Redmi 14C):
ரெட்மி 14C (Redmi 14C) ஸ்மார்ட்போன், "C3N" மற்றும் "C3NL" ஆகியவை உள் மாதிரி எண்களைக் கொண்டுள்ளன. மேலும் அவற்றின் சமீபத்திய கண்டுபிடிப்பு சாதனத்தை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இது HyperOS மூலக் குறியீட்டில் உள்ள தகவல்களின்படி, Redmi 14C ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (MediaTek Helio G81) செயலி மூலம் இயக்கப்படும் முதல் சாதனமாகும்.
இதற்கு முந்தைய ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 13C (Redmi 13C) சாதனம் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) உடன் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் புதிய மாடலில் "G81" என்ற சிப்செட் செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை. இந்த செயலி MT6768 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் "மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா (Helio G91 Ultra) என்ற பெயருடன் செயலியையும் பயன்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் வருகைக்கு இன்னும் சிலரை மாதங்கள் இருப்பதினால், எந்த தகவலையும் இப்போதே நம்மால் மிக உறுதியாக கூறிவிட முடியாது. அதேபோல், லீக் தகவல்களின் கணிப்பை நாம் கவனிக்காமல் நிராகரிக்கவும் முடியாது. வெளிவரவிருக்கும் புதிய Redmi 14C ஸ்மார்ட்போன் ஆனது Redmi 13C போலவே செயல்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், இதன் விலையும் கூட, ரெட்மி 13C ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 14C (Redmi 14C) ஆனது IMEI தரவுத்தளத்தில் மாடல் எண் 2409BRN2CL உடன் காணப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள மற்ற மாடல் எண்களும் புதிய ஸ்மார்ட்போனுக்கு சொந்தமானது. மேலும், புதிய Redmi 14C சர்வதேச சந்தையில், இந்தியா மற்றும் சீனாவில் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








