ஆகஸ்ட் 31 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. வருகிறது புது Redmi போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி அதன் புதிய ரெட்மி 14சி (Redmi 14C) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 5160mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வியட்நாமில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் மற்ற நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ரெட்மி 14சி அம்சங்கள் (Redmi 14C Specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி91 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த அசத்தலான ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 14சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சஙகளும் இதில் உள்ளன.

5160mAh பேட்டரி உடன் இந்த ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதன பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)கொண்டுள்ளது இந்த போன்.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








