ஆர்டருக்கு மேல ஆர்டர்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. அடிமட்ட பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த ரெட்மி 14சி 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி 14சி 5ஜி முழு அம்சங்கள் (Redmi 14C 5G Full Specifications): இந்த ரெட்மி போனில் அடிமட்ட பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. அதேபோல லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்கும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஓசி (Octa Core 4nm Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் கிடைக்கிறது.

மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மூன்று வேரியண்ட்களுக்கும் கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது, 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம்.
இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசி டிம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டிஸ்பிளேவில் பஞ்ச்-ஹோல் டிசைன் கிடைக்கவில்லை, வாட்டர் டிராப் கொடுக்கப்பட்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டூயல் கேமரா செட்டப் இருந்தாலும், கேமரா பம்ப் பிரீமியம் டிசைனில் குவாட் செட்டப் லுக் கொடுக்கிறது. இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது, பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் மட்டுமே பேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ கிடைக்கிறது.
மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் பக்காவாகவே இருக்கிறது. ஏனென்றால், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5160mAh பேட்டரியை கொடுக்கிறது.
இந்த ரெட்மியில் IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) மற்றும் ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டார்லைட் டிசைன் மற்றும் குளோசி கிளாஸ் பேக் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








