Home
Mobile

இறங்கி அடித்த அமேசான்.. ரூ.9499 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 5160எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்பேர்னுக்கு ரூ.284 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இறங்கி அடித்த அமேசான்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ரெட்மி 14சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.

6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 14சி 5ஜி போன் அறிமுகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 1640 × 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் டிசி டிமிங், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மர்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் Xiaomi HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் , எப்எம் ரேடியோ உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் உள்ளன.

இறங்கி அடித்த அமேசான்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ரெட்மி 14சி 5ஜி போன். மேலும் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 5160mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.மேலும் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் உள்ளன. ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G with 4GB RAM price slashed on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X