ரெடியா இருங்க.. 5160mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. மலிவு விலையில் வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் 2025ஜி எனக் குறிப்பிட்டு புதிய ஸ்மார்ட்போன் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது ரெட்மி. அதாவது இன்னும் சில நாட்களில் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் புதிய போனின் பெயரை வெளியிடவில்லை ரெட்மி.
ஆனால் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (Paras Guglani) இந்த புதிய போனின் பெயர் ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) என்று தெரிவித்துள்ளார். இந்த போன் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் மலிவு விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 14சி 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 1640 × 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ரெட்மி 14சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு டூயல் ஸ்பீக்கர் ஆதரவுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும்.

5160mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரெட்மி 14சி 5ஜி போன் மலிவு விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








