Home
Mobile

ஜனவரி 6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலை.. 50எம்பி கேமரா.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதாவது ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.10,999 அல்லது ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. மேலும் ஏற்கனவே கசிந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜனவரி 6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Redmi 5ஜி போன்..

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ரெட்மி 14சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 14சி 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 1640 × 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு டூயல் ஸ்பீக்கர் ஆதரவுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Redmi 5ஜி போன்..

இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G price was leaked online before its launch in India : check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X