Home
Mobile

மறுபடியும் 3 லட்சம் யூனிட்கள் ஆர்டர் போட ரெடி ஆகுங்க.. Redmi 14C 5G வருது.. விலை, அம்சங்கள்!

Redmi New 5G Phone: கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகி, முதல் விற்பனையிலே 3 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி.. இந்திய மொபைல் மார்க்கெட்டையே திணறவிட்ட ஒரு ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனின் "அடுத்த வெர்ஷன்" அறிமுகத்திற்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது. அது ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) மாடலாகும். இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

நேற்று வரையலாக லீக்ஸ் தகவல்களில் மட்டுமே சிக்கி வந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் "இருப்பு" தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹைப்பர்ஓஎஸ் சோர்ஸ் கோடில் (HyperOS source code) இருந்து கிடைத்த தகவலின்படி ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பதையும், புதிய ரெட்மி 14சி 5ஜி ஆனது ரெட்மி 14ஆர் 5ஜி (Redmi 14R 5G) ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

Redmi 14C 5G வருது.. விலை, அம்சங்கள்!

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன்னர் தான் சீன சந்தையில் அறிமுகமானது. அதாவது சீனவில் ரெட்மி 14ஆர் 5ஜி ஆக அறிமுகமான அதே மாடல் உலகளாவிய மற்றும் இந்திய சந்தையில் ரெட்மி 14சி 5ஜி என்கிற அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து நமக்கு எந்த குழப்பமும் இருக்காது.

ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இது 6.68-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8ஜிபி வரை ரேம் உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் வாட்டர் டிராப் ஸ்டைலில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதுதவிர்த்து 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,000 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.17,700, ரூ.20,100 மற்றும் ரூ.22,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இது டீப் ஓஷன் ப்ளூ, லாவெண்டர், ஆலிவ் கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவு இல்லை என்றாலும் கூட, இதே மாடல் தான் மற்ற சந்தைகளுக்கு ரெட்மி 14சி 5ஜி ஆக வரும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த ஆண்டு அறிமுகமான ரெட்மி 13சி 5ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G Launching Soon Could be rebranded version of Redmi 14R 5G Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X