Home
Mobile

சொன்னபடியே மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த Redmi.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய புதிய ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி 14சி 5ஜி போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சியோமி 14சி 5ஜி போன் அறிமுகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 1640 × 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் டிசி டிமிங், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சொன்னபடியே மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த Redmi.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் ரெட்மி 14சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மர்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

Xiaomi HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் , எப்எம் ரேடியோ உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ரெட்மி 14சி 5ஜி போன். மேலும் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.மேலும் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும்.

சொன்னபடியே மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த Redmi.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 14சி 5ஜி போனில் உள்ளன. ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.10,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஜனவரி 10-ம் தேதி பிளிப்கார்ட், அமேசான், சியோமி உள்ளிட்ட தளங்களில் இந்த புதிய ரெட்மி போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X