2025 ஆரம்பமே அசத்தலா இருக்கே.. பட்ஜெட் விலையில் இன்னொரு Redmi 5G போன்.. 5160mAh பேட்டரி, 50MP கேமரா!
2025 புத்தாண்டு ஆனது 2 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் (ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர்) அறிமுகத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்த்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஒரு சூப்பர் டிவிஸ்டு. 2025 ஆம் ஆண்டானது ரெட்மியின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்துடன் தொடங்கப்போகிறது.
ஜனவரி 7 ஆம் தேதி ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 Series) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 6 ஆம் தேதியன்று ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி, இந்திய மார்க்கெட்டில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இந்நிலைப்பாட்டில் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகமானது "பட்ஜெட்-விலை 5ஜி மொபைல் சந்தை"யை ஆட்சி செய்ய வேண்டும் என்கிற ஷாவ்மீ நிறுவனத்தின் திட்டத்தை பிரதிபலிக்கிறது என்றே கூறலாம்.
ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதிப்படுத்தப்பட்ட வேகத்தில் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பட்டியல் பக்கம் (Product listing page) இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது "அழகு மற்றும் பிரபஞ்சத்தின் சக்தி" மூலம் ஈர்க்கப்பட்ட "ஸ்டார்லைட்" வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. மேலும் ரெட்மி இந்தியா வெளியிட்டுள்ள டீஸர் போட்டோவின் வழியாக இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர்களில் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்று - லைட் ப்ளூ; இரண்டாவது - பிளாக். மூன்றாவது - கிரே மற்றும் டார்க் ப்ளூ உடனான டூயல்-டோன் டிஸைனுடன் வரும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 5ஜி சிம் ஆதரவை (Dual 5G SIM suppor) வழங்கும். மேலும் இது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இமேஜிங் அம்சங்கள் (Artificial intelligence-powered imaging features) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும்.
முன்னதாக வெளியான சில அறிக்கைகள் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 14ஆர் (Redmi 14R) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கலாம் என்கிறன. இது உண்மையாகும் பட்சத்தில், ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும்.
மேலும் ரெட்மி 14ஆர் ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற அம்சங்களையும்.. அதாவது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1640x720 ரெசல்யூஷன் உடனான 6.88-இன்ச் டிஸ்பிளே மற்றும் 18W ஃபாஸ்ட்-வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களையும் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் நாம் எதிர்பார்க்கலாம்.
விலையை பொறுத்தவரை ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது (முன்னரே குறிப்பிட்டபடி) ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகவே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ரெட்மி 14ஆர் ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 128GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,000 க்கும், 6GB ரேம் + 128GB ஆப்ஷன் சுமார் ரூ.17,500 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 128GB ஆப்ஷன் சுமார் ரூ.20,000 க்கும் அறிமுகமானது.
இப்போதைக்கு இந்தியாவில் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று வைத்துக்கொள்வோம்; அதுதான் நமக்கும் நல்லது. ஆனாலும் கூட இது இன்னும் மலிவான விலைக்கு (ரூ.10,999 அல்லது ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்) அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications








