Home
Mobile

ரூ.12499 க்கு புது 5ஜி போன்.. உடனே ரூ.8999 க்கு இறங்கிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G ) மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 இ-காமர்ஸ் தளங்களுமே முன்னதாக வெளியான ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளன.

தற்போது ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேசிக் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அமேசான் இந்தியா (Amazon India ) வலைத்தளத்தில் ரூ.8,998 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.8999 க்கு இறங்கிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆக தற்போது அமேசான் மற்றும் [பிளிப்கார்ட் ஆகிய 2 தளங்களுமே ரூ.1000 விலை குறைப்பை வழங்குகின்றன.

ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் HD+ LCD டிஸ்பிளே
- நீல ஒளி உமிழ்வுகளுக்கான TÜV Rheinland சான்றிதழ், TÜV Rheinland Flicker Free சான்றிதழ் மற்றும் சர்க்காடியன் சான்றிதழ்
- 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 Gஜென் 2 சிப்செட்

- 6ஜிபி வரை LPDDR4X ரேம்
- ஸ்டோரேஜை பயன்படுத்தி 12ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கும் ஆதரவு
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP52 ரேட்டிங்
- 5,160mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்

புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அமேசான் மைக்ரோசைட் ஆனத இது 50-மெகாபிக்சல் டூயல் ஏஐ கேமரா செட்டப் உடன் வரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது கடந்த செப்டம்பரில் அறிமுகமான இதே ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் உள்ளதை போலவே இருக்கிறது.

க்ளோபல் வேரியண்ட் ஆனது 50-மெகாபிக்சல் (எப் /1.8) ப்ரைமரி கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 329.7 மணிநேர காத்திருப்பு நேரம், 106.9 மணிநேர மியூசிக், 28.9 மணிநேர இன்ஸ்டாகிராம் ஸ்க்ரோலிங் மற்றும் 23.1 மணிநேரம் வரை யூடியூப் வீடியோ ஆகியவற்றை வழங்குவதாக கூறப்படுகிறது.

இதோடு 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் , "நாள் முழுவதுமான கண் வசதிக்காக" TUV ரைன்லேண்ட் சான்றிதழ் உடனான 6.9-இன்ச் டிஸ்பிளே, மீடியா டெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட HyperOS 2 ஸ்கின், Circle to Search போன்ற பல்வேறு AI அம்சங்கள் ஆகியவைகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

விலையை பொறுத்தவரை இந்தியாவில் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 இல் தொடங்கும் என்று கூறப்படுகிறது, இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம். அறிமுகத்திற்கு பின்னர் அமேசான் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக டஸ்க் பர்பிள், மூன்லைட் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G Gets Rs 1000 Price Cut Ahead Redmi 15C 5G India launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X