Home
Mobile

ஜன.6-க்கு அப்புறம் இந்த 5G Phone தான் மார்க்கெட் ராஜா! ரூ.11,000 பட்ஜெட்ல 120Hz டிஸ்பிளே, 5160mAh பேட்டரி!

சரி.. ஆட்டத்தை நாங்களே ஆரம்பிக்கிறோம் என்று கூறும்படியாக சீன நிறுவனமான ஷாவ்மீ - 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது. அது ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) மாடலாகும். இது ஜனவரி 6 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

ஒருநாள் கழித்து, அதாவது ஜனவரி 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாடல்களும் முறையே பிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ் அறிமுகமாகும் என்பதால், இவைகள் எல்லோருக்குமான போன்களாக இருக்காது. ஆனால் ரெட்மி 14சி 5ஜி அப்படி இல்லை!

ஜன.6-க்கு அப்புறம் இந்த 5G Phone தான் மார்க்கெட் ராஜா!

ரெட்மி 14சி ஆனது சூப்பர் பட்ஜெட் விலையில் (அதாவது ரூ.10,000 க்குள் அல்லது அதற்கு நெருக்கமான விலை நிர்ணயம் கொண்ட) 5ஜி ஸ்மார்ட்போன்களை தேடுபவர்களை குறிவைத்து அறிமுகமாகும் ஒரு மாடலாகும். மிகவும் சமீபத்தில் அறிமுகமாகி, விற்பனையில் சக்கைபோடு போடும் ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) மாடலும் கூட இவ்வகையை சேர்ந்த மாடல் தான்.

ஆனால் ரெட்மி 14சி 5ஜி ஆனது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் சிறப்பான வரவேற்பை பெறும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இது ரூ.11,000 - ரூ.12,000 பட்ஜெட்டில் 5ஜி ஆதரவுடன் வருவது மட்டுமின்றி, சில நம்பமுடியாத அம்சங்களை பேக் செய்கிறது. அப்படி என்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ரெட்மி 14சி 5ஜி அறிமுகத்தையொட்டி, ரெட்மி நிறுவனம் பகிர்ந்துள்ள புதிய டீஸர்களின் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் மற்றும் டிஸ்பிளே விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கூடவே அறிமுகம் செய்யப்பட்டபின்னர், இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 14சி 5ஜி கலர் ஆப்ஷன்கள்: இந்த ஸ்மார்ட்போன் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும். ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) ஆகிய கலர்களில் அறிமுகமாகும் என்பதை ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியான டீசர்களின் வழியாக ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் பளபளப்பான பேனல்கள் மற்றும் பேக் பேனலில் மையமாக வைக்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான கேமரா யூனிட்டையும், அதில் உள்ள மல்டிபிள் சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டையும் காண முடிகிறது. பேக் பேனலில் உள்ள பொறிக்கப்பட்ட டெக்ஸ்ட் ஆனது ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் எம்ஐ இந்தியா (Mi India) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) இணையதளங்களில் உள்ள ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட்டுகள் வழியாக, இந்த ஸ்மார்ட்போன் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது, நீல ஒளி உமிழ்வுகளுக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ், TÜV ரைன்லேண்ட் ஃப்ளிக்கர் இலவச சான்றிதழ் மற்றும் சர்க்காடியன் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் கனெக்டிவிட்டி உடன் வருவதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை பேக் செய்யலாம். சரியான விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை தேதியானது ஜனவரி 6 நடக்கும் அறிமுகத்தின் போது வெளிப்படுத்தப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G Display Colourways Design Camera Details Revealed Ahead India Launch on January 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X