அதிருது மார்க்கெட்.. கம்மி பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. புது Redmi 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி 13எக்ஸ் (Redmi 13x) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது மலேசியாவின் SIRIM சான்றிதழ் தளத்தில் இந்த போன் காணப்பட்டது. எனவே விரைவில் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி 13எக்ஸ் அம்சங்கள் (Redmi 13x Specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா (Helio G91 Ultra) சிப்செட் வசதியுடன் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றம் செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5030mAh பேட்டரி உடன் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ௩௩வ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்ற கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








