யாருமே எதிர்பார்க்கல.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய Redmi போன்.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி 13எக்ஸ் (Redmi 13x) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, ஐபி53 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பன அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி 13எக்ஸ் அம்சங்கள் (Redmi 13x Specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்காக ஐபி3 ரேட்டிங் கட்டமைப்பை (IP53-rated build for dust and splash resistance) கொண்டுள்ளது இந்த போன்
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா (Helio G91 Ultra) சிப்செட் வசதியுடன் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 13எக்ஸ் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரலு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi's HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இந்த போனில் உள்ளது.

5030mAh பேட்டரி உடன் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஆனால் ரெட்மி 13எக்ஸ் போன் தற்போது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி 13எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை VND 4,290,000 (இந்திய மதிப்பில் ரூ.14,351) ஆக உள்ளது.
photo credit: gizmochina, XiaomiVietnam


Click it and Unblock the Notifications








