மீண்டும் மீண்டுமா.. வெறும் ரூ.11,700 போதும்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. புதிய ரெட்மி 5ஜி போன் அறிமுகம்..
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசசததலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ரெட்மி 13சி எனும் ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.
அதாவது ரெட்மி நிறுவனம் இன்று ரெட்மி 13ஆர் 5ஜி (Redmi 13R 5G) எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 13ஆர் 5ஜி அம்சங்கள்(Redmi 13R 5G specifications): 6.74-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (IPS LCD display) வசதியுடன் இந்த ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் தரமான டைமன்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100 Plus) வசதியுடன் இந்த ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 18W fast charging) ஆதரவு கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனில சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் சிம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் 195 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் ஸ்டார் ராக் பிளாக் (Star Rock Black), பேண்டஸி பர்பிள் ( Fantasy Purple) மற்றும் வேவ் வாட்டர் கிரீன் (Wave Water Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 13ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,700) ஆகும். விரைவில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








