மிரண்டு போவீங்க.. ரூ.10000 பட்ஜெட்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், டிரிபிள் கேமரா, 18W சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற பிசிறு தட்டாத அம்சங்களுடன் ரெட்மி 13சி (Redmi 13C) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ரெட்மி 13சி அம்சங்கள் (Redmi 13C Specifications): இந்த ரெட்மி போனில் 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மி 13சி மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அதோடு 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி மாடலில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, ரேம் மற்றும் மெமரியில் பக்காவான மாடலாகவே இந்த ரெட்மி 13சி போன் இருக்கிறது.
டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. எல்இடி பிளாஷ் லைட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டிரிபிள் கேமராக்கள் பெரும்பாலும் பட்ஜெட் போன்களில் வருவதில்லை. அந்த வகையில், இந்த போன் மிகுந்த வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. இந்த ரெட்மி மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.
இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 192 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ரெட்மி 13சி போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. இதன் டிசைன் ஸ்லிம் (Slim) மற்றும் லைட்வெயிட் (Lightweight) கொண்டுள்ளது.
இந்த போன் பிளாக் (Black) மற்றும் க்ளோவர் கிரீன் (Clover Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ரெட்மி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,160ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,242ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் கம்மியான விலையில் டிரிபிள் ரியர் கேமரா, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட் கொண்டிருப்பதால் மற்ற நாடுகளிலும், இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








