Home
Mobile

அடேங்கப்பா.. தீபாவளிக்கு தயாரான ரெட்மி.. மலிவு விலையில் அசத்தலான புது போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 13சி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது இந்த புது ரெட்மி போன் BIS சான்றிதழைப் பெற்றுள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு முன்பு இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுவும் இந்த ரெட்மி 13சி போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பிரபலமான யூடியூப் சேனலில் ரெட்மி 13 அன்பாக்சிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது அந்த வீடியோ.

 தீபாவளிக்கு தயாரான ரெட்மி.. மலிவு விலையில் அசத்தலான புது போன்..

இப்போது ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

 தீபாவளிக்கு தயாரான ரெட்மி.. மலிவு விலையில் அசத்தலான புது போன்..

பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 8-கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் (8-core Helio G85 chipset) வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கும் இந்த போன் அருமையாகப் பயன்படும். ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவும் இதில் உள்ளது.

 தீபாவளிக்கு தயாரான ரெட்மி.. மலிவு விலையில் அசத்தலான புது போன்..

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்தியாவில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,322 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C unboxing video reveals specifications and design: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X