Home
Mobile

கம்மி பட்ஜெட்.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புதிய Redmi போன்.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

கம்மி பட்ஜெட்.. இந்தியாவுக்கு வரும் புதிய Redmi போன்.. எந்த மாடல்?

குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அமைப்பைக் கொண்டு இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 8-கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் (8-core Helio G85 chipset) வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கும் இந்த போன் அருமையாகப் பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரெட்மி போன் அறிமுகமாகும்.

கம்மி பட்ஜெட்.. இந்தியாவுக்கு வரும் புதிய Redmi போன்.. எந்த மாடல்?

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போன் 196 கிராம் எடையில் அறிமுகமாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது கம்மி விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரும் நவம்பர் 29-ம் தேதி ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ரெட்மி கே70இ, ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ரெட்மி கே70 சீரிஸ் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C to launch in India soon: specifications leaked online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X