ரூ.11,600-க்கு இப்படி ஒரு Phone-ஆ.. 8GB ரேம், 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங், 50MP கேமரா.. வேற என்ன வேணும்!
"ரூ.12000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா!" என்று வியக்க வைக்கும்படியான அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன், அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன ஸ்மார்ட்போன்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ரெட்மியின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) அறிவிக்கப்படாத நிலையில், அமேசான் வலைத்தளத்தில் ரெட்மி 13சி மாடலின் விலை மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1600 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.74-இன்ச் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (LCD HD+ Display) கொண்டுருக்கும்.
ரெட்மி 13சி ஆனது ஹீலியோ ஜி85 சிப்செட் (Helio G85 Chipset) மூலம் இயக்கப்படலாம். இந்த சிப்செட் 8ஜிபி வரை ரேம் (Up to 8GB RAM) மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் (Up to 256GB Internal Storage) இணைக்கப்பட்டு இருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் வரலாம். கேமராக்களை பொறுத்தவரை, இதன் ரியர் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) பேக் செய்யப்படலாம்.
முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் (Finger Print Scanner) இடம்பெறலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot), டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support), 4ஜி வோல்ட்இ (4G VoLTE), வைஃபை (WiFI), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), அளவீட்டில் 168 x 78 x 8.09 மிமீ மற்றும் எடையில் 192 கிராமும் உள்ளது.
ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை? அமேசான் லிஸ்டிங்கின் (Amazon Listing) படி, ரெட்மி 13சி ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) அறிமுகம் செய்யப்படும். இவ்விரண்டும், இந்திய ரூபாய் மதிப்பின்படி முறையே ரூ.11630 க்கும், ரூ.13420 க்கும் வாங்க கிடைக்கும்.
சமீபத்திய அறிக்கை, ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் (Black), ப்ளூ (Blue), லைட் க்ரீன் (Light Green) மற்றும் லைட் ப்ளூ (Light Blue) என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்கிறது. ஆனால் அமேசான் லிஸ்டிங்கோ, இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் நேவி ப்ளூ (Navy Blue) என்கிற 2 ஆப்ஷன்களில் மட்டுமே வெளியாகும் என்கிறது.
சுருக்கமாக, ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது போக்கோ சி65 (Poco C65) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும். நினைவூட்டும் வண்ணம் போக்கோ சி65 ஏற்கனவே உலகளவில் அறிமுகமாகி விட்டது. அறியாதோர்களுக்கு ரீபிராண்டட் வெர்ஷன் என்றால், ஒரே மாதிரியான அம்சங்களுடன் வெவ்வேறு பிராண்ட் பெயரின் கீழ், வெவ்வேறு சந்தைகளில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications