இதை எதிர்பார்க்கல.. 50எம்பி கேமரா.. கம்மி விலை.. வருகிறது அடுத்த ரெட்மி ஸ்மார்போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி 13சி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் குறைந்த விலையில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
அதாவது இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உள்ளது. மேலும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
லைட் கிரீன், பிளாக், ப்ளூ நிறங்களில் இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. விரைவில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.
மேலும் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து கம்மி விலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இப்போது அந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம். ரெட்மி 12 5ஜி போன் ஆனது 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி 12 5ஜி போன். குறிப்பாக இதுபோன்ற சிப்செட் கம்மி விலையில் வெளிவருவது இதுவே முதல்முறை. மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் இதில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் ரெட்மி 12 5ஜி போன் கிடைக்கும்.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12 5ஜி போனின் விலை 11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மறறும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.13,499-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.15,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
photo courtesy: mysmartprice


Click it and Unblock the Notifications








