50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. 6.74-இன்ச் டிஸ்பிளே.. டிச.6-ல் இந்தியாவுக்கு வரும் Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின அம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மி 13சி அம்சங்கள் (Redmi 13C specifications): ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டார் ஷைன் கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிளாக் நிறங்களில் வெளிவரும். பின்பு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 8-கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் (8-core Helio G85 chipset) வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் வசதிகளுக்கும் இந்த போன் அருமையாகப் பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 13சி ஸ்மார்ட்போன். மேலும் 720 X 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ரெட்மி போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போன் 196 கிராம் எடையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








