அதிரும் மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. Dimensity 6100 பிளஸ்.. இந்தியாவுக்கு வரும் புது ரெட்மி 5ஜி போன்..
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி 13சி 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி வரும் வாரங்களில் இந்த புதிய ரெட்மி 5ஜி போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி 13சி போனின் அம்சங்களை ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
அதாவது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23124RN87I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயன்களுக்கு தகுந்தபடி இந்த போனுக்கு சிப்செட் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கேமிங் பயனர்களும் இந்த ரெட்மி 13சி 5ஜி போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக ரெட்மி 13சி 5ஜி போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 50எம்பி ரியர் கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி 13சி 5ஜி அறிமுகமாகும். தற்போது இந்த ரெட்மி 13சி 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும்.
மேலும் ரெட்மி நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். அதாவது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி 12 5ஜி போன் மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
ரெட்மி 12 5ஜி ஆனது 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த போனில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 12 5ஜி போன். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் ரெட்மி 12 5ஜி போன் கிடைக்கும்.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த ரெட்மி 12 5ஜி போன் ஆனது ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரெட்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








