Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ரெட்மி 13சி 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது 13சி 5ஜி போனுக்கு அமேசான் தளத்தில் ரெட்மி 13சி 5ஜி போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே உடன் வருகிறது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுதவிர இந்த போனின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்(Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 13சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) ரெட்மி 13சி 5ஜி போனில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செலபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.

ஆனாலும் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கம். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack)போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C 5G with 4GB RAM price slashed on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X