அசூர விற்பனை.. வெறும் ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) போனானது, அமேசான் தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. ஏஐ கேமரா, 1டிபி மெமரி போன்ற அம்சங்களில் பின்னியெடுக்கிறது.
ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): இந்த போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் வருகிறது.
இந்த ரெட்மி 13சி 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது. இந்த ரெட்மி போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் டைம்-லேப்ஸ், ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

அதோடு 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) மற்றும் சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த மாடல் 192 கிராம் எடை மற்றும் 8.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock) வருகிறது. அதோடு சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் எப்எம் ரேடியோ (FM Radio) சப்போர்ட் வருகிறது.
இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. ஸ்டார்லைட் பிளாக், ஸ்டார் ரெயில் சில்வர் மற்றும் ஸ்டார் டிரெயில் கிரீன் ஆகிய 3 கலர்களில் வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும் இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 14,499ஆக இருக்கிறது.
இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில் அறிமுக சலுகையில் ரூ.1000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் (ICICI Bank Credit Card) பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனின் 4ஜிபி+128ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.9,999 க்கு வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








