அவசரப்பட்டு எந்த போனும் வாங்கிடாதீங்க.. 50எம்பி கேமரா.. கம்மி விலையில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் கம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்று இருந்தது. அதாவது கம்மி விலையில் ரெட்மி 12 5ஜி போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 13சி 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போனும் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ரெட்மி 13சி 5ஜி போன் ஆனது இந்தியாவில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளது.

இதுதவிர தாய்லாந்து நாட்டில் கூட இந்த போன் சான்றிதழைப் பெற்றுள்ளது. இப்போது மிகவும் பிரபலமான 3C சான்றிதழ் தளத்தில் 23124RN87C என்ற மாடல் குறியீட்டுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் முதலில சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே வெளியான இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும்.
வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8-கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் (8-core Helio G85 chipset) வசதி ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கும் இந்த போன் அருமையாகப் பயன்படும். ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதி ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவும் இதில் உள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி போன். பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13c 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போன் ரூ.10,000-க்குள் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications