அடிச்சான் பாரு அமேசான்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ரெட்மி 13சி 5ஜி போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.1000 கூப்பன் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.9,499 இருந்தால் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி போன். 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock) வசதிகள் இதில் உள்ளன.
இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செலபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.
ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS), 3.5மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack)போன்ற வசதிகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








