Home
Mobile

சீனாக்காரன் செஞ்சுட்டான்.. முழுசா ஆஃபர்.. ரூ.9499 விலைக்கே 5G Mobile-ஆ? எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?

ரெட்மி (Redmi) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் தான் ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) மாடல். இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் ஆரம்பகாலத்தில் ரூ. 13,999 என்ற விலையில் அறிமுகம் செய்து, விற்பனைக்கு கொண்டு வந்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மீது அதிரடியாக ரூ. 4000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, இதன் விலை மிகவும் மலிவானதாக மாறியுள்ளது. மலிவு விலையில் புதிதாக யாரும் புது மொபைல் வாங்கும் ஐடியாவில் இருக்கிறீர்கள் என்றால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

இந்த அட்டகாசமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது மலிவு விலை செக்மென்ட்டில் வாங்க கிடைக்கிறது. பலதரப்பட்ட சலுகையுடன் இதன் விலை ரூ. 10,000 விலைக்கு கீழ் குறைந்துள்ளது மக்களே. இந்த சலுகையானது கூப்பன் வடிவில் வழங்கப்படுகிறது. ரெட்மி 13C 5ஜி போனின் மீது ரூ. 1000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 13C 5ஜி போனின் அமேசான் விலையான ரூ. 10,499 விலை குறைந்து வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது.

சீனாக்காரன் செஞ்சுட்டான்.. முழுசா ஆஃபர்.. ரூ.9499 விலைக்கே 5G Mobile-ஆ

ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G):

ஒருவேளை உங்களிடம் ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ICICI அட்டை பயனர்களுக்கு கூடுதலாக 5% கேஷ் பேக் நன்மையையும் இந்த போனுடன் கிடைக்கிறது. இந்த விலை 4ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் மாடலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நீங்கள் அதிக ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட மாடல்களுக்கு செல்கிறீர்கள் என்றால், கூப்பன் சலுகை கிடைக்காது.

தற்போது அமேசான் தளத்தில் Redmi 13C 5G போனின் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் விலை ரூ. 11,999 ஆகும். இதேபோல், இந்த போனின் 8ஜிபி + 256ஜிபி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த போன்களின் மீது சிறப்பு கூப்பன் சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 13C 5ஜி சிறப்பம்சம் (Redmi 13C 5G Specifications):
- 6.74" இன்ச் HD+) டிஸ்பிளே
- 1600 x 720 பிக்சல் உடன் குவாலிட்டி
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட்
- 4GB / 6GB / 8GB ரேம்
- 128GB / 256GB ஸ்டோரேஜ்
- 1TB வரையிலான மெமரி
- ஆண்ட்ராய்டு 13
- 50MP + AI டூயல் கேமரா
- 5MP செல்பி கேமரா
- ஏஐ பேஸ் அன்லாக்
- ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்
- எப்எம் ரேடியோ
- 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்
- டூயல் 5G சப்போர்ட்
- 5000mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C 5G Mobile Now Available With Rs 1000 Coupon Discount For Price Of Rs 9499 In Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X