அதிரும் கம்மி விலையில் 5G போனா? மொத்தம் 12GB RAM.. 1TB மெமரி.. 3 கேமராவுடன் Redmi வரிசையில் புது வரவு..
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட்டான ரெட்மி (Redmi) வரும் டிசம்பர் 6ம் தேதி புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) என்ற பெயருடன் வரவிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி 13C 4ஜி (Redmi 13C 4G) மாடலின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியது. இப்போது மீண்டும் நிறுவனம் ஒரு புதிய செய்தியை வெளியிட்டு ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு மற்றொரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிறுவனம் Redmi 13C 4G சாதனத்துடன் புதிய Redmi 13C 5G சாதனத்தையும் சேர்த்து டிசம்பர் 6ம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

ரெட்மி 13C 4ஜி பற்றிய தகவல்களை நாம் கடந்த வாரத்தில் பார்த்துவிட்டோம். இந்த போனில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரங்களையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது புதிதாக அறிமுகமாகவிருக்கும், ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கலாம். இந்த போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.
நமக்கு தெரிந்த தகவலின் படி, புதிய ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) ஆனது டைமென்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100 Plus) சிப்செட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு 6nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட சிப்செட் ஆகும். இது ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மிகவும் புதிய வகை 5ஜி சிப்செட் மாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பட்ஜெட் 5ஜி போன்களுக்கான SoC ஆகும்.
3C சான்றிதழில் இந்த ஸ்மார்ட்போன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (10W fast charging) அம்சத்தைக் கொண்டிருக்கும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரெட்மி 13C 4ஜி (Redmi 13C 4G) வேரியண்ட் மாடல் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான (18W fast charging) அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனங்கள் பற்றிய கூடுதல் விபரங்களை நாம் அடுத்து வரும் வாரங்களில் டீசர் தகவல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும், ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) அம்சங்கள் ரெட்மி 13C 4ஜி போனை ஒத்தியிருக்கும் என்றே நம்பப்படுகிறது. இரண்டு போன்களுக்கும் இடையில் பெரும்பாலும் சிப்செட் மட்டுமே வேறுபடும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி 13C 4ஜி போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளதென்ற முழு விபரம் இதோ.
ரெட்மி 13C 4ஜி சிறப்பம்சம் (Redmi 13C 4G Specifications):
- 6.74-இன்ச் கொண்ட 720 x 1600 பிக்சல்கள் உடைய HD+ LCD டிஸ்பிளே (display)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் (90Hz refresh rate) வீதம்
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட்
- 8ஜிபி ரேம் (8 GB RAM) / 256 ஜிபி ஸ்டோரேஜ் (256GB storage)
- 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் (4GB virtual RAM)
- ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான MIUI 14 இயங்குதளம்
- 1TB வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்டோரேஜ் (1TB MicroSD storage)
- 18W பாஸ்ட் சார்ஜிங் (fast charging)
- 5,000mAh பேட்டரி (Battery)
- 50MP + 2MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 8MP செல்பி கேமரா
- 4ஜி வோல்டி (4G VoLTE)
- வைப்பை (Wi-Fi)
- ப்ளூடூத் 5.1 (ப்ளூடூத் 5.1)
- ஜிபிஎஸ் (GPS)
- யுஎஸ்பி டைப்-சி (USB-C) போர்ட்
- 3.5mm ஆடியோ ஜாக்
போன்ற அம்சங்களை இந்த சாதனம் பேக் செய்கிறது. ரெட்மி 13C 5ஜி போனிலும் இதே அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை: ரூ.14,999 க்குள் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications