Home
Mobile

வெறும் ரூ.8,300 தானா.. பிச்சிக்கிட்டு பறக்க போகும் விற்பனை.. 6.71-இன்ச் HD+ டிஸ்பிளே, 50MP கேமரா.. என்ன மாடல்?

"என்னது இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,300 தானா.. அப்போ இதோட விற்பனை சும்மா பிச்சிக்கிட்டு பறக்குமே!" என்று கூறவைக்கும்படியான ஒரு ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பெயர் குறிப்பிடுவது போலவே இது முன்னதாக அறிமுகமான ரெட்மி 12சி 4ஜி (Redmi 12C 4G) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக இருக்கும்.

வெறும் ரூ.8,300 தானா.. பிச்சிக்கிட்டு பறக்க போகும் விற்பனை!

எப்போது அறிமுகம்? தற்போது வரையிலாக ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி 4ஜி-க்கு அடுத்தபடியாக வரும் பட்சத்தில், இதுவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஆன்லைனில் லீக்கான லைவ் இமேஜ்களின்படி, ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ப்ளூ மற்றும் க்ரீன் கலர் ஆப்ஷன்களில் வெளியாகும். வடிவமைப்பை பொறுத்தவரை டிஸ்பிளேவின் மேல் மையத்தில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது; அதில் செல்பீ கேமரா உட்பொதிக்கப்படும்.

வெறும் ரூ.8,300 தானா.. பிச்சிக்கிட்டு பறக்க போகும் விற்பனை!

பேக் பேனலை பொறுத்தவரை, ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இந்த செட்டப் பேக் பேனலின் மேல் இடது மூலையில் உள்ளது. அதில் இரண்டு வட்ட வடிவிலான கேமரா மாட்யூல்கள் உள்ளன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆகியவைகள் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் உட்பொதிக்கப்பட்டுள்ளன.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

வெறும் ரூ.8,300 தானா.. பிச்சிக்கிட்டு பறக்க போகும் விற்பனை!

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் (MediaTek Helio G96 SoC) மூலம் இயக்கப்படும். இந்த பட்ஜெட் விலை ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 (MIUI 13) ஓஎஸ் கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறலாம்.

என்ன விலைக்கு வரும்? சில பிராந்தியங்களில், ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் $100 க்கும் குறைவாக இருக்கும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.8,300 ஆகும். ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் ரூ.8,300 தானா.. பிச்சிக்கிட்டு பறக்க போகும் விற்பனை!

ரெட்மி 12சி 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது மேட் பிளாக், மின்ட் க்ரீன், ராயல் ப்ளூ மற்றும் லாவெண்டர் பர்ப்பிள் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை ரெட்மி 12சி 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜய் சிப்செட் (Octa-core MediaTek Helio G85 SoC) மூலம் இயக்கப்படுகிறது. கடைசியாக இது 10வாட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C 4G Smartphone Coming Soon Launch Date Specifications Price All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X