பிளிப்கார்ட் அதிருது.. ரூ.11,399 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) போனின் வெளியீட்டை அடுத்து ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 108 எம்பி கேமரா, 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கும் இந்த ரெட்மி 13 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 விலை குறைப்பு போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இதன் மார்கெட் விலை 13,999ஆக இருக்கிறது. அதேபோல ரூ.15,499 மார்கெட் விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இப்போது ரூ.12,849ஆக இருக்கிறது.

ஆகவே, 2 வேரியண்ட்களுக்கும் விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக ரூ.600 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக ரூ.11,399 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். பிளாக் டயமண்ட் (Black Diamond), ஹவாயன் ப்ளூ (Hawaiian Blue) மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G Specifications): இந்த ரெட்மி போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எப்இ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5030mAh பேட்டரி கிடைக்கிறது. IP53 ரேட்டிங் கொம்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஓஎஸ் மட்டுமே குறையாக இருக்கிறது. கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரியில் குறையில்லை.
இப்போது வெளியாகி இருக்கும் ரெட்மி 15 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆரம்ப வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் 2 இதில் வருகிறது.
மேலும், ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP64 ரேட்டிங் கிடைக்கிறது. இந்த ரெட்மி 15 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கான பட்ஜெட் மாடலாக களமிறங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








