Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 ரேஞ்ச்.. 108MP கேமரா.. 5030mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

108 எம்பி மெயின் கேமரா, 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், சியோமி ஹைபர் ஓஸ், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் மற்றும் டைனாமிக் ரிங் ஃபிளாஷ் கொண்ட ரெட்மி 13 5ஜி (Redmi13 5G) போனானது, நம்ப முடியாத பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இந்த ரெட்மி 13 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரெட்மி மாடலானது, அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஜூலை 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால், அந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கேமரா, பேட்டரி, சிப்செட், டிசைன் மற்றும் கலர்கள் உறுதியாகி விட்டன.

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 ரேஞ்ச்.. 108MP கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G Specifications): இந்த ரெட்மியில் சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஓசி (Octa Core Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,030mAh பேட்டரி வருகிறது.

108 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. கிரிஸ்டல் கிளாஸ் டிசைனில் (Crystal Glass Design) ரிங் ஃபிளாஷ் (Ring Flash) வருகிறது. இந்த டிசைனில் ஹவாயன் ப்ளூ (Hawaiian Blue), ஆர்சிட் பிங்க் (Orchid Pink) மற்றும் பிளாக் டையமன்ட் (Black Diamond) ஆகிய கலர்களில் வருகிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. மேற்கூறிய பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 ரேஞ்ச்.. 108MP கேமரா.. எந்த மாடல்?

இந்த ரெட்மி 13 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 6.67 இன்ச் டிஸ்பிளேவானது, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. பஞ்ச்-ஹோல் நாட்ஜ் டிசைன் (Punch-hole Notch Design) கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், எஸ்டி கார்டு சிலாட்டும் வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது.

அதேபோல வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியும் உள்ளது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் வர வாய்ப்புள்ளது. இந்த ரெட்மி 13 5ஜி போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, கேமரா பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெர வாய்ப்புள்ளது.

ஏனென்றால், ஜூலை 9ஆம் தேதி இந்த ரெட்மி 13 5ஜி போன் வெளியாகும்போது, பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகள் கிடைக்கும். இதன் மூலம் மேலும் மலிவாக இந்த போனை வாங்கி கொள்ளலாம். இதே பீச்சர்கள் மற்றும் டிசைனில் 4ஜி வேரியண்ட்டாக இந்தோனிஷியாவில் ரெட்மி 13 போன் வெளியாகிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13 5G With 108MP Camera, 5030mAh Battery Launch July 9 Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X