Home
Mobile

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.12,999 போதும்.. 108MP கேமரா.. அறிமுகமானது Redmi போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மாரட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சர்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை விற்பனை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைடன்ஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  அறிமுகமானது Redmi போன்..

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.

பின்பு இதில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  அறிமுகமானது Redmi போன்..

108எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 5030எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடீயோ ஜாக் (3.5mm audio jack) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  அறிமுகமானது Redmi போன்..

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வை-பை 806.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), ஜிபிஸ் (GPS), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 13 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.15,499-ஆக உள்ளது. அமேசான் (amazon), எம்ஐ.காம் தளங்களில் வரும் ஜூலை 12-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் வாங்க விட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X