Home
Mobile

ஜூலை 9 உறுதி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்த புதிய ரெட்மி போன் 33 வாட்ஸ் சார்ஜிங், 50எம்பி கேமரா, எல்சிடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி 13 5ஜி போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 9 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக ரெட்மி 12 5ஜி போனுக்கு அடுத்து இந்த ரெட்மி 13 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 ஜூலை 9 உறுதி.. மலிவு விலையில் வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைடன்ஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு 3 வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

ஆனாலும் ஆணட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5300எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.

 ஜூலை 9 உறுதி.. மலிவு விலையில் வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்ட்இ, வை-பை, ஜிபிஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 13 5G India Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X