Home
Mobile

டிசம்பர் 3 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 13 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி பல சிறப்பான வசதிகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி 5ஜி போன்..

தரமான 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் ஹைப்பர் ஓஎஸ் 2 (HyperOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அதேபோல் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

குறிப்பாக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

அதுவும் 6000mAh பேட்டரி உடன் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி (NFC), ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் தற்போது வெளியான தகவலின்படி, ரூ.15,000-க்கு கீழ் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி போன் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13 5G India launch date, price and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X