Home
Mobile

Redmi ருத்ர தாண்டவம்.. வெறும் ரூ.12,000-க்கு 5G, கார்னிங் கொரில்லா, 5030mAh பேட்டரி, 33W சார்ஜிங்! என்ன மாடல்?

என்னதான் ரியல்மியும், சாம்சங்கும், மோட்டோரோலாவும் போட்டிபோட்டுக்கொண்டு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும் கூட.. இந்திய மொபைல் சந்தையில் "சும்மா உக்காந்துக்கிட்டே சிக்ஸ் அடிப்பது" என்னவோ சீன பிராண்ட் ஆன ரெட்மி தான்! அதிலும் ரூ.10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட் என்று வந்துவிட்டால் ரெட்மி நிறுவனத்தை தாண்டி தான் வேறோரு பிராண்டின் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டியதாக இருக்கும். இந்நிலைப்பாட்டில் ரூ.15,000 க்குள் என்கிற ரேஞ்சில் தனது இருப்பை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள ரெட்மி நிறுவனம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

இந்திய சந்தையில், விற்பனையில் சக்கைபோட்டு போட்ட.. இன்னும் சொல்லப்போனால் சக்கைபோடு போட்டுக்கொண்டே இருக்கும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனை வருகிற ஜூலை 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

Redmi 13 5G ஸ்மார்ட்போன்: இந்திய அறிமுக தேதி, அம்சங்கள், விலை!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். அமேசான் இந்தியா வலைதளத்தில் லைவ் ஆகியுள்ள மைக்ரோசைட் வழியாக ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 9, 2024 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசைனை பொறுத்தவரை.. ரெட்மி 13 5ஜி ஆனது பெரும்பாலும் அதன் முன்னோடியின் (ரெட்மி 12 5ஜி) அடிச்சுவடுகளை பின்பற்றுகிறது. இது பிளாட் ஆன எட்ஜ்களுடன் க்ளீன் ஆன பிளாட் பேக் டிசைனை கொண்டுள்ளது. மேலும் அதன் முன்னோடியைப் போலவே, பேக் பேனலில் 3 புரோட்ரூஷன்களை கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது; மூன்றாவது ஒரு ரிங் லைட்டை கொண்டுள்ளது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது. லைட் ப்ளூ மற்றும் லைட் பிங்க். சுவாரசியமாக இவ்விரு கலர் ஆப்ஷன்களுமே கிளாஸ் பேக் பினிஷை கொண்டுள்ளன. வெளியீட்டின் போது மேலும் சில கலர் ஆப்ஷன்கள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை.. ​ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) இருப்பதாக ரெட்மி பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் காணப்படும் அதே சிப் ஆகும்.

இதுதவிர்த்து ரெட்மி 13 5ஜி ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடன் 5ஜி ஸ்மார்ட்போனின் பிரிவில் வெளியாகும் மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட்போன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது அட்வான்ஸ்டு 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்ட 5030mAh பேட்டரிஏய் பேக் செய்யும். கடைசியாக, இது ஹைப்பர்ஓஎஸ் (அவுட்-ஆப்-பாக்ஸ்) உடன் வரும். இதுதவிர்த்து வேறெந்த அம்சங்களும் டீஸ் செய்யப்படவில்லை.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இது ரெட்மி 12 5ஜி-ன் அதே விலை நிர்ணயத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 க்கு அறிமுகமானது. இதைவைத்து பார்க்கும் போது (அதே சிப்செட்டை பேக் செய்வதால்) ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனும் கூட ரூ.12,000-ஐ சுற்றிய விலையில் தான் அறிமுகமாகும்.

முன்னதாக வெளியான ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 X 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.79 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேம்பட்ட செயல்திறனுக்காக இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி52 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

8ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவும் உள்ளது. அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால், பயன்படுத்தப்படாத இன்டர்னல் ஸ்டோரேஜை தற்காலிகமான ரேம் ஆக "கடன் வாங்கிக்கொள்ள" உதவும் ஒரு ரேம் எக்ஸ்டென்ஷன் அம்சம் ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 8 எம்பி செல்பீ கேமராவும் உள்ளது.

ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நிறுவனத்தின் சொந்த எம்ஐயுஐ 14 ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி53 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 13 5G India Launch Date July 7 Confirmed Design Specifications Expected Price All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X