Home
Mobile

விட கூடாத விலை குறைப்பு.. இப்போ ரூ.12,000 பட்ஜெட்டில்.. 108MP கேமரா, 5030mAh பேட்டரி.. Redmi 5ஜி போன்!

108எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5030mAh பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.12,000 பட்ஜெட்டிற்கு இறங்கியுள்ளது. என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இது அறிமுக விலையாக இருந்தது; அதாவது பின்னாளில் அசல் விற்பனை விலைக்கு திரும்பியது.

விட கூடாத விலை குறைப்பு.. இப்போ ரூ.12,000 பட்ஜெட்டில்!

இதற்கிடையில் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக 30% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனின் மீது 5% பேங்க் டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், 6.79-இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது சாம்சங் ISOCELL HM6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5030mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டு உள்ளது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கு 4 காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதறகான 3 காரணங்களும் கூட எங்களிடம் உள்ளன: முதல் காரணம் - இது பல எண்ணிக்கையிலான மூன்றாம் தரப்பு ஆப்களை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே ஸ்மூத் ஆக இருக்கிறது ஆனால் ப்ரைட் ஆனதாக இல்லை. இதன் டிஸ்பிளே ப்ரைட்னஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம். மூன்றாவது காரணம் - இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13 5G Gets Price Cut on Flipkart Check Offer Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X