பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.17,944 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5030mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மற்றும் பிரீயமியம் லுக் கொண்ட ரெட்மி 13 4ஜி (Redmi 13 4G) பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.
ரெட்மி 13 4ஜி அம்சங்கள் (Redmi 13 4G Specifications): இந்த ரெட்மியில் 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் ஃபுல்எச்டிபிளஸ் கொடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

அதேபோல லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஹைபர்ஓஎஸ் (HyperOS) வருகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா (MediaTek Helio G91 Ultra) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் பட்ஜெட் போன்களில் பக்கா 108 எம்பி கேமரா மற்றும் இன்-சென்சார் ஜூன் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாகும்.
இந்த ரெட்மி 13 4ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. அதேபோல 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொண்ட 8 ஜிபி ரேம் வேரியண்ட் வருகிறது. இந்த வேரியண்ட்டில் 256 ஜிபி மெமரி சப்போர்ட் உள்ளது.
இதுபோக 1 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD card Slot) வருகிறது. ஆகவே, பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ரெட்மி 13 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, பட்ஜெட் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. மேலும், இந்த ரெட்மி மாடலானது, 13 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. இந்த போனின் பேட்டரி சிஸ்டம் பட்ஜெட்டுக்கு பக்காவாக இருக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது.
டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட 5030mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி இருந்தும், 8.17 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 198.5 கிராம் எடையை பேக் செய்கிறது. IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் (Side-facing Fingerprint Sensor) வருகிறது.
இந்த ரெட்மி 13 4ஜி போனானது, 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. கிளாஸ் பேக் (Glass Back) டிசைனில் ப்ளூ (Blue), பிங்க் (Pink), கோல்டு (Gold) மற்றும் பிளாக் (Black) ஆகிய 4 கலர்களில் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் கொடுக்கும் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
ரெட்மி 13 4ஜி விலை (Redmi 13 4G Price): இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,944 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,649ஆகவும் இருக்கிறது. இப்போது, ஐரோப்பாவில் அறிமுகமாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








