Home
Mobile

ரூ.10,000 விலையில் நல்ல போன் வேணுமா? இந்த போன் வாங்கனா, அக்கடானு இருந்துக்கலாம்!

மலிவு விலை போன்களுக்கு பெயர்பெற்ற ரெட்மி (Redmi) நிறுவனம், விற்பனையில் சக்கைபோடு போட்ட ரெட்மி 12சி (Redmi 12C) போனின் புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட்டை விற்பனைக்கு களமிறக்கியிருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில், நல்ல போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த போன் பக்கா சாய்ஸ்.

ஆரம்பத்தில் மிட்-ரேன்ஞ் விலையில் போன்களை வாங்கி, அதை பயன்படுத்திய பின்பு, மலிவு விலை போன்களையே வாங்கியிருக்காலம். இதில் அவ்வளவு சிறப்பாக ஏதுமில்லை என்று பல ஸ்மார்ட்போன் பிரியர்கள் நினைப்பது உண்டு. இதனால், மலிவான விலையில் தரமான அம்சங்களுடன் வெளியாகும் போன்களை வாங்கிவிட்டு அக்கடானு இருக்காலம் என்றும் பலர் திட்டம் போட்டிருப்பார்கள்.

ரூ.10,000 பட்ஜெட்! இந்த போன் வாங்கனா, அக்கடானு இருந்துக்கலாம்!

இவர்களுக்கு ரெட்மி 12சி போன் பக்க சாய்ஸாக இருக்கும். இந்த போன் மார்ச் மாதம் வெளியாகி விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், அதன் புதிய ஸ்டோரேஜ் மாடலை வெளியிட ரெட்மி நிறுவனம் முடிவு செய்து, அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இப்போது, அந்த போனின் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் அம்சங்கள், விலை குறித்த தகவல்கள் பின்வருமாறு.

ரெட்மி 12சி அம்சங்கள்: இந்த ரெட்மி போன் 6.71 இன்ச் (1650*720 பிக்சல்ஸ்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மாலி ஜி52 எம்சி2 (Mali-G52 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டுள்ளது. இந்த ரெட்மி 12சி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000mAh பேட்டரி வருகிறது. ஆனால், டைப் சி போர்ட் கிடையாது, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்ட வந்தது. இப்போது, 4 ஜிபி ரேம் +128 ஜிபி என்னும் புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்ட் சப்போர்ட் வருகிறது.

3.5மிமீ ஹெட்போன் ஜாக் வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ.8,999-க்கும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.10,999-க்கும் விற்பனையாகிறது. இப்போது வெளியான 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ரெட்மி 12சி போன் மேட் பிளாக் (Matte Black), மின்ட் கிரீன் (Mint Green), ராயல் ப்ளூ (Royal Blue), மற்றும் லேவண்டர் பர்பிள் (Lavender Purple) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட், அமோசான் மற்றும் எம்ஐ தளங்களில் ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

இந்த போன் மலிவான விலை என்பதால், விற்பனையில் சக்கைபோடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi 12C With 4GB RAM, 128GB Storage Variant Launched in India, Here is Price, Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X