Home
Mobile

ரூ.9,999 பட்ஜெட் கிங்.. 50MP கேமரா, 13GB ரேம், 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் மலிவு விலை போனான ரெட்மி 12சி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. வெறும் ரூ.8,999 விலையில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி என்று முக்கிய அம்சங்கள் அசத்தலாக கொடுக்கப்பட்டன.

இது, இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும், ஸ்டோரேஜ் வசதி மட்டும் குறைவாக இருப்பதாக ரெட்மி பிரியர்கள் தெரிவித்து வந்தனர். இதற்கு செவி சாய்த்த ரெட்மி நிறுவனம், 8 ஜிபி + 256 ஜிபி என்ற புதிய வேரியண்ட்டை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ரூ.9,999 பட்ஜெட் கிங்! 50MP கேமரா, 13GB ரேம், 5000mAh பேட்டரி!

இதனை உறுதிபடுத்தும் விதமாக, ரெட்மி நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில், ரெட்மி 12 சி போனின் ஸ்டோரேஜ் அதிகரிக்கப்பட்ட வேரியண்ட் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த போன் ஆஃபர் விலையில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் ரெட்மி 12சி போனின் முழு அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

ரெட்மி 12சி அம்சங்கள் (Redmi 12C Specification) : இந்த ரெட்மி போன் 6.7 இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மாலி ஜி52 எம்சி2 (Mali-G52 MC2) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 கொண்டு இயங்குகிறது.

இந்த ரெட்மி 12சி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. இதோடு 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்ட் சப்போர்ட் உள்ளது.

3.5மிமீ ஹெட்போன் ஜாக் வருகிறது. இப்போதை அறிவிப்பின்படி 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ.8,999-க்கும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.10,999-க்கும் விற்பனையாகிறது. ஆனால், புதியதாக வரவிருக்கும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆஃபர் விலையில் ரூ.9,999-க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல விர்ச்சுவல் ரேம் வசதியும் 5 ஜிபியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன்படி 13 ஜிபி ரேம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi 12C New Storage Variant To Launch in India, Here is Price, Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X