Home
Mobile

அப்படி போடு: ஆரம்ப விலை ரூ.8,999: இரண்டு போன்களை அறிமுகம் செய்த Redmi.! முழு விவரம்.!

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 12 மற்றும் ரெட்மி 12சி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய போன்களும் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு ரெட்மி போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 12 அம்சங்கள்: ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றுட் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆரம்ப விலை ரூ.8,999: இரண்டு போன்களை அறிமுகம் செய்த Redmi.!

குறிப்பாக ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரோஜ் வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 போன் வெளிவந்துள்ளது.

புதிய ரெட்மி நோட் 12 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ரெட்மி நோட் 12 விலை: 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 4ஜி போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் வங்கி சலுகையுடன் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ரெட்மி போனை ரூ.13,999-விலையிலும், 128ஜிபி ஸ்டோரோஜ் கொண்ட வேரியண்டை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். சன்ரைஸ் கோல்ட், ஐஸ் புளூ மற்றும் லூனார் பிளாக் நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.

ஆரம்ப விலை ரூ.8,999: இரண்டு போன்களை அறிமுகம் செய்த Redmi.!

ரெட்மி 12சி அம்சங்கள்: 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1600×720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெட்மி 12சி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ரெட்மி 12சி ஸ்மார்ட்போன். பின்பு 5எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஆரம்ப விலை ரூ.8,999: இரண்டு போன்களை அறிமுகம் செய்த Redmi.!

ரெட்மி 12சி விலை: 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் வங்கி சலுகையுடன் 4ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.8,499-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.10,499 விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக மேட் பிளாக், மிண்ட் கிரீன், ராயல் புளூ மற்றும் லாவெண்டர் பர்பில் இந்த போன் கிடைக்கும். அதேபோல் இந்த இரண்டு போன்கள் வரும் ஏப்ரல் 6-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12C and Note 12 smartphones launched in India at affordable prices: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X